Kandhar Anubhuti is the highest form of worship towards the Supreme Lord Subrahmanya, the finest literature and crowning glory of Bhakti. It is a spontaneous outpouring of Sri Arunagiri Nathar when he was in Divine Ecstacy of being united with Lord Sri Skanda and considered as maha manatharam.. It is popular to say that Sri Arunagirinathar sang Anubhuti when he was in Anubhuti
This is the last episode of skanda sashti special series. IT IS CUSTOMARY TO SING ANUBHUTHI IN THIRUPPUGAZH ISAIVAZIPADU AT THE END FOLLOWED BY PUJAI AND PRARTHANAI.
On this auspicious occasion of Skanda Sashti, let’s learn few verses from Kandar Anubuthi.
Ragam- Hamsadhwani ஹம்சத்வனி
வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.
ஆறுமுகக் கடவுளே! 'பரம்பொருள்' என்பது யாது? ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? 'நான்' என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? ['நீயேநான்-நானேநீ' என்று கூறி] அடியேனை ஆட்கொண்ட தேவரீரோ?
vAnO punalpAr kanal mArudhamO
njAnOdhayamO navil nAnmaRaiyO
yAnO manamO enaiyANda idam
thAnO poruLAvadhu saNmuganE?.
O, God Sanmukaa! What is the Supreme Being like? Is it the sky, the water, the earth, the fire, or the air? Is it perceivable by one's wisdom? Is it the four Vedas, which are being recited? Is it the soul that is referred to as 'I' ? Is it the mind? Is it Your Supreme Self, who graciously accepted me as Your devotee [by saying, 'Yourself is myself', and 'myself is Yourself']?
Ragam –Bageshree பாகேஸ்ரீ
25. மெய்யே என
(வினை மிகுந்த வாழ்வை நீக்கு முருகா)
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.
உண்மை வாழ்வென்று எண்ணி கொடிய வினைக்கு
ஈடான இந்த வாழ்வில் களித்து மகிழ்ந்து, ஐயோ, அடியேன் அலைதல் முறையோ? தேவரீரின்
திருக்கரங்கள் மட்டுமன்றி, கையில் ஏந்தும் வேலாயுதம், வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகள் ஆகியவை எல்லாம் செந்நிறமாய்
அமைந்து, மயில் வாகனத்தின் மீது ஏறிய மாவீரரே
meiyE ena vevvinai vAzhvai ugandhu
aiyO adiyEn alaiyath thagumO
kaiyO ayilO kazhalO muzhudhum
seiyOi mayilERiya sEvaganE!
Is it right that I should wander, by regarding this life of cruel deeds as the real life, and being delighted in it? O, Lord, not only Your Sacred Hands, but also the weapon of lance, held by Your hand, and the Sacred Feet, adorned with heroic anklets, are all of red complexion, and You are the Great warrior riding on Your vehicle of peacock!
With this verse, we can pray to Lord Murugan, the red-hued One to remove the delusion of this world, and seek His Grace to Unite with Him
Ragam – Sindhubairavi ஸிந்துபைரவி
33. சிந்தா ஆகுல
(பந்தத்தின்று எனைக் காவாய்)
சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.
கங்கை நதி ஈன்ற வரத மூர்த்தியே! கந்தப்பெருமானே! திருமுருகப்பெருமானே! கருணைக்கு இருப்பிடமானவரே! மனத்துக்கு வருத்தம் தரும் இல்லற வாழ்க்கையுடன் செல்வம் என்னும் விந்தியமலைக்காடு போன்ற சிக்கல் நிறைந்த சூழலை அடியேன் என்று விட்டு விலகுவேன்?
sindhA Agulam illOdu selvam enum
vindhAdavi endRu vidappeRuvEn?
mandhAgini thandha varOdhayanE
kandhA murugA karuNAgaranE!
O, Lord! You were born of the Ganges river! You are the abode of boons and compassion! O, Lord Kanthaa! O, Lord Thirumurugaa! When will I let go of the complex swirl of domestic life, afflicting the mind, and of the wealth, which is like the jungle of Vindhya mountain range?
Ragam – Mohanam மோகனம்
44. சாடும் தனி
(முருகன் திருவடி தந்தான்)
சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே.
பகைவர்களைத் தொளைத்து அழிக்கும் ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானே! வீடுபேற்றின் நிலையிலும், விண்ணோர்களின் தலைமீதும் நான்கு வேதங்களிலும் கொடிய காட்டிடையேயும் தினைப்புனத்திலும் விளங்கும் வீரக்கழல்கள் அணியப்பெற்றத் தேவரீரின் திருவடிகளை அடியேன் சிரசின்மீது அடைக்கலமாகச் சூட்டிக் கொள்ளுமாறு தேவரீர் தந்தருளிய கருணையை அடியேன் எடுத்துச் சொல்லக்கூடுமோ?
sAdum thanivEl murugan saraNam
sUdumbadi thandhadhu sollumadhO
veedum surar mAmudi vEdhamum veng-
kAdum punamum kamazhum kazhalE!
O, Lord Thirumurugapperumaaan! You have the unique weapon of lance, which pierces through the enemies and destroys them! Will I ever be able to say how great is the blessings of compassion, which You have graciously granted me, so that I could wear over my head Your heroic anklets-adorned Sacred Feet, which are prominent in the abode of mukthi (liberation), as well as over the celestials' heads, the four Vedas, the cruel jungle, and the millet field?
Ragam – Surutti சுருட்டி
பாடல் 46 - எந்தாயும் எனக்கு
எந்தாயும் எனக் கருள்தந் தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே உமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே!
கந்தப் பெருமானே! ஒளிவீசும்
வேலாயுதத்தை உடையவரே! உமாதேவியின் மைந்தரே! குமார மூர்த்தியே! வேத மூர்த்தியே!
தேவரீர் அடியேனின் தாயும், அடியேனுக்கு அருள்புரியும் தந்தையும்
ஆவீர்! அடியேனின் மனவருத்தங்கள் யாவற்றையும் நீக்கி அடியேனை ஆண்டருள்வீராக!
enthAyum enakku aruL thandhaiyum nee!
sindhAkulamAnavai theerththu enai AL
kandhA! kadhirvElavanE! umaiyAL
maindhA! kumarA! maRainAyaganE!
O, Lord Kanthapperumaan! You have the lustrous weapon of lance! You are the beloved Divine Son of Umaathevi! O, Lord Kumaraa! You are the Lord of the Vedas! You are my mother, and father bestowing me grace! Please accept me as Your devotee by removing all the sufferings of my mind!
51. உருவாய் அருவாய்
(குருவாக வந்து அருளினான் கந்தன்)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும்,
அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும்
அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! தேவரீர்
குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!
uruvAi aruvAi uLadhAi iladhAi
maruvAi malarAi maNiyAi oLiyAik
karuvAi uyirAik gadhiyAi vidhiyAik
guruvAi varuvAi aruLvAi guganE!
O, God Thirumurugapperumaan! You are the Preceptor (to Lord Sivaperumaan)! You are the Supreme Being, who has form, and who has no form! You are an existent being, and You are also an invisible being! You are the fragrance, and You are also the flower, having the fragrance! You are the precious gem, and You are also its lustre! You are the embryo, where the soul abides, and You are also the body and soul! You are the abode of mukthi [liberation] and You are also the destiny, which drives the soul to the abode of mukthi! May You be gracious enough to appear before me as the Preceptor, and bestow me grace!