Vel –Mayil-Seval
Virutham:
Saint
Arunagirinathar had composed many poems in praise of Lord Muruga. He believed
that even the Vel, Mayil and Seval, of Lord Muruga are praise worthy.
Vel is a sharp
Weapon adorning the hand of God Murugan, Mayil (Peacock) is His Vehicle (the Vahana)
and Seval (Rooster) is His Flag.
. Vel is a symbol
of intellect, Mayil represents splendor and majesty and Seval wakes up people from
darkness to dawn.
Virutham is the
tempo of the lyrics. Arunagirinathar glorifies the three- Vel, Mayil and Seval,
each in ten viruthams
Today, we’re going
to learn one Vel Virutham-”அண்டர்உல குஞ்சுழல”
In this Virutham, Arunagirinathar
reveals the power of vel.
அண்டர்உல குஞ்சுழல
ராகம்:மனோலயம் தாளம்:ஆதி
அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
வகைவகையி னிற்சுழலும் வேல்
தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே.
கந்தன் அடல் கொண்ட வேலே
முருகன் அடல் கொண்ட வேலே
......... பதவுரை .........
வேல் வருகின்ற வேகத்தினால் நடந்தவைகள்
அண்டர் உலகம் சுழல ... தேவலோகம் சுழற்சி அடையவும்,
எண் திசைகளும் சுழல ... எட்டு திசைகளும் நிலை தடுமாறி சுற்றவும்,
அங்கியும் உடன் சுழலவே ... எல்லாவற்றையும் நீறாக்கக் கூடிய
அக்னி தேவனும் சுற்றவும்,
அலை கடல்களும் சுழல ... அலை வீசும் சமுத்திரம் கொதிப்படைந்து
கொந்தளிக்கவும்,
அவுணர் உயிரும் சுழல ... அசுரர்களின் உயிர்கள் தமக்கு முடிவு காலம்
வந்து விட்டதே என எண்ணி பதட்டத்தினால் சுற்றவும்,
அகில தலமும் சுழலவே ... எல்லா பிரபஞ்சமும் சுழலவும்,
மண்டல நிறைந்த சத கோடி ரவி ... வட்ட வடிவமாயுள்ள ஆயிரம்
கோடி சூரியர்கள் போலவும்,
சதகோடி மதி ... ஆயிரம் கோடி சந்திரர்கள் போலவும் (விளங்கிக்
கொண்டு),
உதிர மாணப் பிறங்கி ... அசுரர்களின் குருதி ஏராளமாக பெருக,
அணியும் மணி ஒலி ... தான் பூஷணமாக அணிந்திருக்கும்
மணிகளின் சப்தத்தால்
சகல தலமும் மருள ... எல்லா உலகங்களும் மருட்சி அடையவும்,
சிரம வகை வகையினில் சுழலும் வேல் ... ஆயுதப் பயிற்சியை
படையில் பலவித நடைகளுடன் சுழன்று வருகின்ற வேலாயுதம்
(அது யாருடையது என வினவினால்)
தண்டமுடனும் ... தண்டாயுதத்துடனும்,
கொடிய பாசமுடனும் ... கொடுமையான பாசக் கயிற்றுடனும்,
கரிய சந்தமுடனும் ... கருத்த நிறத்துடனும்,
பிறைகள் போல் தந்தமுடனும் ... சந்திர பிறை போல் வளைந்த
கோரப் பற்களுடனும்,
தழலும் வெங்கணுடனும் ... தீக் கொப்புளிக்கின்ற கொடிய
கண்களுடனும்,
பகடு தன் புறம் ... எருமைக் கடாவில் ஏறி வரும்,
சமனை ... எமனை,
யான் கண்டு குலையும் பொழுதில் ... நான் பார்த்து அச்சப்பட்டு
நடுங்கும்போது,
அஞ்சல் என ... பயப்படாதே என்று,
மென் சரண கஞ்சம் உதவும் கருணைவேள் ... தன்னுடைய
மிருதுவான தாமரை மலரன்ன திருவடித் தாமரையை தந்தருளும்
கருணாமூர்த்தி,
கந்தன் ... கந்தப் பெருமான்,
முருகன் ... முருகப் பெருமான்,
குமரன் ... குகப் பெருமான்
வண் குறவர் ... வளப்பமான வாழ்க்கையை உடைய வேடர்களின்,
தம் புதல்வி ... புத்திரியான வள்ளிப் பிராட்டியின்,
கணவன் ... மணாளன்,
அடல் கொண்ட வேலே ... மிகவும் வளமையான வேலாயுதமே அது.
vael viruththam - 4
aNtar ulakum
chulzhala eNthichaikaLum chulzhala
anGkiyum utan
chulzhalavae
alaikatalkaLum
chulzhala avuNar uyirum chulzhala
akila thalamum
chulzhalavae
maNtala nhiRainhtha
ravi chathakoati mathi uthira
maaNap piRanGki
aNiyum
maNi oliyiniR
chakala thalamu maruLa chirama
vakai vakaiyiniR
chulzhalum vael
thaNtam utanunG
kotiya paacham utanunG kariya
chanhtham utanum
piRaikaLpoal
thanhthamuta nunhthalzhalum
venGkaN utanum pakatu
thanpuRam varum
chamanai yaan
kaNtu kulaiyum
polzhuthil aGnchalena mencharaNa
kaGncham uthavum
karuNaivaeL
kanhthan murukan
kumaran vaNkuRavar thamputhalvi
kaNavan atal koNta
vaela
Meaning:
The world of celestials spun; the eight directions of the earh spun and along with them, the god of Fire spun too;
The wavy seas spun; the lives of the demons spun, as also the entire cosmos;
Appearing like the millions of spherical suns and moons
amidst the gushing blood of the asuras and scaring all the worlds with the
sound of its tinkling bells, Murugan's vel practices its spins in a variety of
ways;
With dhandayudha, noose of attachment (pasakayiru), dark complexion, and crescent-moon like teeth,
with fiery and fierce eyes and riding on the bull, when the Yama approaches, பகடு (pagadu): male buffalo; bull; seeing which I get agitated, You are the benevolent Lord who offers me His soft, lotus-like feet, asking me not to fear.
He is Kanthan, Murugan, Kumaran and the consort of the
daughter of the fierce hunter; the vel in His hands is the weapon whose power
is described in the first half of the poem.
No comments:
Post a Comment